TamilsGuide

டொராண்டோவில் வெறுப்புணர்வு தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒருவரை தேடும் பொலிஸார்

டொராண்டோவின் 'சர்ச் மற்றும் வெல்லஸ்லி' (Church and Wellesley) பகுதியில் நடந்த வெறுப்புணர்வுத் தாக்குதல் தொடர்பாக, இரு சந்தேக நபர்களை அடையாளம் காணப் பொதுமக்களின் உதவியைத் டொராண்டோ காவல்துறையினர் கோரியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 12:22 மணியளவில், சர்ச் வீதி மற்றும் அலெக்சாண்டர் வீதி சந்திப்பில் நபர் ஒருவர் நடந்து சென்றபோது, அவ்வழியாக காரில் வந்த இருவர் அவரை ஓரினச்சேர்க்கையாளர் என இழிவுபடுத்தும் வகையில் வசைபாடியுள்ளனர்.

அதன்பின்னர், தங்கள் காரை நிறுத்திவிட்டு அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்று அவர்கள் கொடூரமாகத் தாக்கியதுடன், கருப்பு நிற செடான் ரக காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலை 'வெறுப்புணர்வுக் குற்றப் பிரிவு' (Hate Crime Unit) தீவிரமாக விசாரித்து வருகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் சுமார் 6 அடி மற்றும் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட மெலிந்த தேகமுடைய வெள்ளை இனத்தவர்கள் எனவும், அவர்கள் இருவரும் முழுவதுமாக கருப்பு நிற ஆடைகளையும் முகமூடியையும் அணிந்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.  
 

Leave a comment

Comment