ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி (aljazeeraenglish Majid Khademi ) கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச ஊடகங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை குற்றஞ் சுமத்தியுள்ளது.
எனினும் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி (aljazeeraenglish Majid Khademi) எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


