TamilsGuide

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் கையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 775 ரூபாவினால் உயர்த்தியுள்ளது – புதிய விலை 4,765 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 308 உயர்த்தப்பட்டுள்ளது – புதிய விலை 1,910 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 140 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது – புதிய விலை 890 ரூபாவாகும்.

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 1,070 ரூபாவினால் உயர்த்தியுள்ளது – புதிய விலை 5,700 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 418 உயர்த்தப்பட்டுள்ளது – புதிய விலை 2,280 ரூபாவாகும்.

உலகளாவிய சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து இந்த விலை ஏற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment