TamilsGuide

கனடாவில் வாகன விபத்து - ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

கனடாவின் சஸ்காடூன் நகரில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து அதிகாலை 3.00 மணியளவில் அதிவேகநெடுஞ்சாலை 16க்கு செல்லும் மேற்கு திசை வெளியேறும் பாதையில், இடம்பெற்றுள்ளது.

ஒரு வாகனம் தலைகீழாக புரண்ட நிலையில் இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் இருந்த நால்வரில், மூவர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருந்ததுடன், ஒருவர் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 24 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் 21 வயது மற்றும் 24 வயது ஆண்கள் இருவரும், 22 வயதுடைய பெண்ணொருவரும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணத்தை சஸ்காடூன் பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக சாலையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment