TamilsGuide

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரம் உள்ளது. இங்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட அக்கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் மேயர் வேட்பாளருக்கான போட்டியில் ரினி சம்பத் பங்கேற்கிறார். இதற்கு தேவையான கட்சியின் 4,500 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

அந்த வகையில், வாஷிங்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

ரினி சம்பத் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

ஜனநாயக கட்சி சார்பில் மேயர் தேர்தல் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்ள உள்ளார்.

வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால், உட்கட்சி தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெற்றால், மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

இதுவரை கடந்த 50 ஆண்டுகளாக வாஷிங்டன் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியினரே வென்றுள்ளனர்.
 

Leave a comment

Comment