கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் கட்டிய கே.பி.எஸ் தியேட்டர் திறப்பு விழாவில் ஒரே மேடையில் கருணாநிதி, புரட்சி தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா!
எம்ஜி.ஆர் நடித்த ரிக்ஷாகாரன் திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளியானது அந்த படத்தை தனது திரையரங்கில் கே.பி.சுந்தராம்பாள் திரையிட நினைத்தாராம் .
ஆனால் இன்னொரு தியேட்டர் அதிக பணம் கட்டி படத்தை வாங்கிவடவே கே.பி.சுந்தராம்பாள் வருத்தத்தில் இருந்தார்.
இது பற்றி தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் கூறியபோது கே.பி.எஸ் தியேட்டருக்கென்றே தனி ரீல் பெட்டி ஒன்றை அனுப்பி வைக்குமாறு தனது மேலாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களிடம் ஆணையிட்டாராம். எம்.ஜி.ஆரிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட ரீல் பெட்டி என ஊரெங்கும் செய்தி பரவ வசூல் சக்கை போடு போட்டதாம்.
ஆனால்...தற்போது அந்த தியேட்டர் இடிக்கப் பட்டுவிட்டது
Sivasubramanian Sankaralinganadar


