கதை திரைகதை வசனங்கள் டப்பிங் இயக்கம் என்று அனைத்து துறைகளிலும் வெற்றிப்பெற்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கிழக்கே போகும் ரயில் (1978) திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் 1979 ஆம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து கொண்டிருக்கும் போது பாரதிராஜாவிடம் உதவியாளராக இணைந்தார்.
1980 இலிருந்து 1982 வரை பாரதிராஜாவின் திரைப்படங்களில் கதை, வசனம் எழுதினார். நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம், போன்ற ஒரு சில படங்களில் மணிவண்ணன் பாரதிராஜாவுக்கு உதவினார். 1982 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். முதல் படமாக கோபுரங்கள்_சாய்வதில்லை படம் இயக்கி வெற்றியும் பெற்றார்..
இயக்கங்களில் வெற்றி பெற்ற மணிவண்ணன்..தனது குரு பேச்சுக்கு இணங்கி தலைவரின் கொடிபறக்குது படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார் . இந்த படத்தில் பாரதிராஜா இவருக்கு பின்னணி கொடுத்திருப்பார். இவரது சொந்தக்குரல் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.
இவரது இயக்கத்தில் வெளியான அமைதிப்படை அதற்க்கு பிறகு இவர் இருந்தாலே படம் வெற்றி என்ற அளவுக்கு திரையுலகம் மாறிப்போனது. உள்ளத்தை அள்ளித்தா வேறு ஒரு பரிமானத்தில் இவரது நடிப்பு அங்கிகாரம் அளித்தது நகைசுவை என்றாலே மணிவண்ணனும் சேர்ந்து கொண்டார்.
மணிவண்ணன் தமிழில் இயக்கிய 50 திரைப்படங்களில் 34 திரைப்படங்கள் வெற்றி பெற்றது. சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரசினிகாந்த், சத்யராஜ், கார்த்திக், மோகன், மாதவன், விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இவர் நடித்திருந்தார்.
சிறு வயதிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ளவர். தமிழீழ போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பரான இவர் , சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் வரை எடுத்துள்ளார்.
-Jo vijil


