TamilsGuide

மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட் டிரெய்லர்... 

மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம் ‘பேட்ரியாட்’.

மகேஷ் நாராயணன் இயக்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் ‘பேட்ரியாட்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் மம்மூட்டி, மோகன்லால் ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று டிரெய்லர் மூலம் ஊகிக்கமுடிகிறது.

இப்படம் முதலில் ஏப்ரல் 23ல் வெளியாக இருந்த நிலையில் அண்மையில் தேதி மாற்றப்பட்டு மே 1ந் தேதி திரையரங்குகளில் பேட்ரியாட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

Leave a comment

Comment