TamilsGuide

48 மணிநேரத்தில் நரகத்தை காட்டுவோம் - ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனத்துக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் தனது அரசின் பல முக்கிய முடிவுகளை வெளியிடுவார்.

அந்த வகையில் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிட நான் பத்து நாட்கள் அவகாசம் அளித்ததை நினைவில் கொள்கிறீர்களா?

நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் 48 மணி நேரமே உள்ளது. அதன் பிறகு அவர்கள் மீது நரகம் பொழியத் துவங்கும் (Hell will reign) ) Glory be to GOD!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் கூறி வந்தாலும் ஈரான் அதை மறுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் அதிநவீன f35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதும் அமெரிக்காவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அணுசக்தியை கைவிட மாறுகிறது என கூறி கடந்த பிப்ரவரி 28 இல் ஈரான் மீது இஸ்ரேலுடன் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா ஈரானின் பதிலடி இவ்வாறு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் கடும் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் 48 மணி நேரத்தில் ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்பதையே டிரம்ப் இவ்வாறு உணர்த்துகிறார் என ஊகிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment