சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘ஜெயிலர்2’ படத்திற்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெளியீட்டு தேதியை பட நிறுவனம் அறிவிக்கும். கமலுடன் இணையும் படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றார்.
இதனிடையே, தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு... மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க...? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வணக்கம் என்றார். மேலும் தேர்தல் பிரசாரத்திற்கு நீங்கள் போக வாய்ப்பிருக்கா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்று கூறினார்.


