கந்தளாய், பேராற்று வெளி பகுதியில் உள்ள ஆற்றில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பேராற்று வெளியைச் சேர்ந்த ரிஸ்லான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கந்தளாய் தி/ பேராற்று வெளி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கல்வி பயின்று, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எழுதியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த சிறுவன் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


