தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியான திரிஷா செல்லப்பிராணிகள் மீது தீவிர பிரியம் கொண்டவர். வீட்டில் நாய்க்குட்டிகளை ஆசையோடு வளர்த்து வருகிறார். திரிஷா அனுமன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இது தொடர்பாக அவர் புகைப்படங்களை பதிவிட்டு வெளியிட்டு உள்ள பதிவில் தனது செல்லப்பிராணி முதல் முறையாக கோவிலுக்கு வருவதாக பதிவிட்டு இருந்தார்.
செல்லப்பிராணியுடன் திரிஷா கோவிலுக்கு சென்றதாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோவிலுக்குள் நாயை எப்படி கொண்டு செல்லலாம் என அவருக்கு எதிராகவும் நாயை கோவிலுக்கு அழைத்து செல்வதில் தவறு இல்லை என சிலர் திரிஷாவுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு உள்ளனர்.


