TamilsGuide

அமெரிக்​காவுடன் அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் வீட்டின் மீது தாக்​குதல் - சின்னாபின்னமான உலகின் எதிர்பார்ப்பு

அமெரிக்​காவுடன் அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இராணுவத்​துக்கு இடையே நேற்று 34 ஆவது நாளாக போர் நீடித்​தது.

ஈரான் முன்னாள் வெளி​யுறவு அமைச்​சர் கமல்கராஸி (வயது 81), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தார். இந்த பேச்சுவார்த்தையில் முன்​னேற்​றம் ஏற்​படும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்த சூழலில் ஈரான் மீதான தாக்​குதல்​களை அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் நேற்​றுமுன்​தினம் தீவிரப்​படுத்​தின.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸி​யின் வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டுள்​ளது. இதில் அவர் படு​கா​யம் அடைந்​தார். அவரது குடும்ப உறுப்​பினர்கள் உயி​ரிழந்​துள்ளார். தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்​சுவார்த்தை நடத்​திய ஈரான் மூத்த தலை​வரின் வீட்டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டிருப்​பது பெரும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது.

தொழிற்சாலைகள் மீது குறிமேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அரு​கே​யுள்ள தொழிற்​சாலைகளை குறி வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தின.

இதற்கு பதிலடி​யாக மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்​களை குறி வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தியது
 

Leave a comment

Comment