TamilsGuide

பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அமேசான் கிளவுட் கம்ப்யூட்டிங் (AWS) தரவு மையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மையத்தின் செயல்பாடுகள் தற்காலிக முடக்கத்தை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தாக்குதலில் ஒரு நிறுவனத்தின் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சிவில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளதாகப் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை.

ஆனால் அது அமேசான் உடைய தரவு மையம் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக தங்கள் குடிமக்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியா மத்திய கிழக்கில் உள்ள அமேசான், ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைப்போம் என்று ஈரானின் புரட்சிகர காவலர் படை எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள், மெட்டா உள்ளிட்ட 18 அமெரிக்கத் தொழில்நுட்ப மற்றும் நிதி நிறுவனங்களை 'பயங்கரவாத' அமைப்புகள் என ஈரான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

AWS என்பது அமேசான் நிறுவனத்தின் லாபத்தில் பெரும் பங்கை வகிக்கும் ஒரு பிரிவு. இதன் முடக்கம் உலகளாவிய இணையதளங்கள் மற்றும் அரசு செயல்பாடுகளைப் பாதிக்கும்.

Leave a comment

Comment