TamilsGuide

இந்த அன்புதான் ஒரு விருதின் நீள அகல உயரம்....

மலேசியச் சமுதாயத்தின்
வளர் தலைவர்
முன்னாள் அமைச்சர்
இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள்
என்மீதும் தமிழ் மீதும்
பேரன்பும் பெரும்பற்றும்
கொண்டவர்

என் தோட்டத்தில்
பூ மலர்ந்தாலும்
பூச்செண்டு தந்தனுப்புவார்;
இலை விழுந்தாலும்
இரங்கல் செய்தியிடுவார்

நான் ஞானபீடம்
பெறவேண்டுமென்று
உலக மேடைகள் தோறும்
மூச்சுவிடாமல்
முழங்கிக்கொண்டிருந்தவர்
டத்தோஸ்ரீ சரவணன்

ஞானபீடமே வந்துவிட்டது
சும்மா இருப்பாரா?

எல்லை கடந்து
அன்பைச் சுமந்து
கொள்ளை ரோஜாக் கூடையோடு
கோலாலம்பூரிலிருந்து
வந்துவிட்டார்

‘இது ஒட்டுமொத்த
மலேசியத் தமிழர்களின்
வாழ்த்து’ என்றார்

‘இதில்
ஒவ்வொரு தமிழருக்கும்
பங்கிருக்கிறது’ என்றேன்

இந்த அன்புதான்
ஒரு விருதின்
நீள அகல உயரம்

ஞானபீடம்
நித்தம் நித்தம்
வளர்ந்துகொண்டே போகிறது

வைரமுத்து
@Vairamuthu

Leave a comment

Comment