TamilsGuide

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Comment