TamilsGuide

போர் பதற்றத்தின் நடுவே ஈரான் ஜானாதிபதி அமெரிக்கர்களுக்கு கடிதம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அமெரிக்கர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் , உண்மையிலேயே மத்திய கிழக்கு மோதல் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல் தானா என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாகவும், இஸ்ரேலால் தூண்டப்படுவதாகவும் ஈரான் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.

பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணி தொடுத்த தாக்குதலால் தூண்டப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி, உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் போர் நிறுத்தம் கோரி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியதை தெஹ்ரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது

. அதேவேளை வளைகுடா போரிநானால் உலக நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றன. 

Leave a comment

Comment