TamilsGuide

ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்த வீடியோவால் பரபரப்பில் உலகம்ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்த வீடியோவால் பரபரப்பில் உலகம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேற்காசியாவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வரும் சூழலில், கூடுதல் படைகளை அந்த பகுதியில் குவித்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தரைவழி தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்த தயாராகி இருப்பது தெரிய வருகிறது. இந்த நிலையில், ட்ரம்ப் பகிர்ந்த குண்டுவெடிப்பு வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதுடன், மேற்காசியாவில் அமெரிக்காவின் கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கூறியது அதனை உறுதிபடுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை பென்டகனே முடிவு செய்யும் என்றும் தரைவழி தாக்குதலுக்கான முடிவை டிரம்ப் தனிப்பட்ட முறையில் எடுத்து விட்டார் என்று அர்த்தமல்ல என்றும் லெவிட் கூறினார்.
 

Leave a comment

Comment