TamilsGuide

இருளில் மூழ்கிய ஈரான் - ஒரே தாக்குதலால் நடத்திய பெரும் சம்பவம்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஈரான் எற்கனவே கடும் பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள எரிசக்தி உள் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்கியது.

இதில் வடக்கு ஈரான் நகரமான கராச் அருகே நடந்த தாக்குதலில் துணை மின் நிலையம் மற்றும் மின் நிறுவனங்கள் கடும் சேதமடைந்தன.

இதனால் கராச் மற்றும் கிழக்கு தெக்ரானில் பெரும் பகுதிகளில் பெரிய அளவிலான மின் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வடக்கு ஈரான் முழுவதும் உள்ள பிற நகரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு நீடிப்பதை ஈரானின் எரிசக்தி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

தெக்ரானுக்கு அருகே உள்ள ஷம்ஸ் அபாத்திலும் மின்வெட்டு எற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் தலைநகர் முழுவதும் உள்ள உள் கட்டமைப்பு மற்றும் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
 

Leave a comment

Comment