GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்
இலங்கை
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), நாளை (31) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாளப் போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எந்தவொரு முன் விசாரணையுமின்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சாட்டி, இந்தப் போராட்டத்தைத் தொடங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த GMOA-வின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய,
முந்தைய நிர்வாகங்களால் ஒருபோதும் செய்யப்படாத இடமாற்றங்களுக்கான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாளை அடையாளப் போராட்டம் தொடங்கப்படும்.
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க, நாளை காலை வரை அதிகாரிகளுக்குத் அவகாசம் உள்ளது.
அடையாளப் போராட்டம் நடைபெற்றாலும், மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சைகள் வழக்கம் போல் தொடர்ந்து வழங்கப்படும் – என்று கூறினார்.





















