TamilsGuide

நஷ்டத்துக்குள்ளான உலகின் மிகப்பெரிய வெட்டுக்கிளி பண்ணை

உடற்பயிற்சி செய்தபின் மக்கள் உட்கொள்ளும் புரோட்டீன் பார்கள் வெட்டுக்கிளிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்று தெரியவந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

அப்படி புரோட்டீன் பார்களில் வெட்டுக்கிளிகள் இருப்பது தெரியவந்ததால் மக்கள் அருவருப்பாக உணர, உலகின் மிகப்பெரிய வெட்டுக்கிளி பண்ணை ஒன்று திவாலாகும் நிலையை அடைந்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உடற்பயிற்சி செய்பவர்கள் உடர்ப்யிற்சிக்குப் பின், புரத இழப்பை ஈடு செய்வதற்காக புரோட்டீன் பார்களை உட்கொள்வார்கள்.

சில புரோட்டீன் பார்களில் வெட்டுக்கிளிகள் பொடியாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாம்.

அந்த புரோட்டீன் பார்களில் சேர்ப்பதற்காக, வெட்டுக்கிளிகளை வளர்க்கும் பண்ணை ஒன்று கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2025இல் அந்த பண்ணை திவாலாகும் நிலையை எட்டியுள்ளது.

வெட்டுக்கிளிகளை வளர்ப்பது எளிதான விடயம் இல்லை. ஆக, கஷ்டப்பட்டு வளர்க்கப்படும் வெட்டுக்கிளிகள் பதப்படுத்தப்பட்டு பொடியாக்கப்படும்போது, அந்த பொடியும் விலை அதிகமானதாகவே உள்ளது.

அது ஒரு பக்கம் இருக்க, தாங்கள் உட்கொள்ளும் புரோட்டீன் பார்களில் வெட்டுக்கிளிகள் இருப்பது குறித்து அறிந்த அமெரிக்கர்கள் அருவருப்பாக உணர, அந்த நிறுவனமே திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது. 

Aspire என்னும் நிறுவனம் அந்த வெட்டுக்கிளி பண்ணையை துவங்கி நடத்திவந்த நிலையில், தற்போது அது வேறொரு நிறுவனத்துக்கு கைமாறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விடயம் நீதிமன்றத்திலிருப்பதால் அந்த பண்ணையை வாங்கிய நிறுவனம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

விடயம் என்னவென்றால், வெட்டுக்கிளி பண்ணை துவங்கும் திட்டத்துக்காக, 2013ஆம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் க்ளிண்டன் கையால் அந்த நிறுவனம் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment