TamilsGuide

ஈரானுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- நிச்சயம் பதிலடி உண்டு... 

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன.

அதேநேரம் இரு தரப்புக்கு இடையேயான தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய தளங்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படை கள், விமானங்கள் மூலமும் குண்டுவீசி வருகின்றன.

இதில் அடுத்தகட்டமாக ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக வீரர்களை ஈரானுக்குள் ஊடுருவ வைத்து அதன் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக சுமார் 3,500 கூடுதல் வீரர்களை வளைகுடா பிராந்தியத்துக்கு அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் ஈரானை ஒட்டிய பகுதிகளை அடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு ஈரானில் தரைவழி தாக்குதல் தொடங்கினால் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஆனால் அமெரிக்க படைகள் ஈரான் மண்ணில் இறங்கினால், அவர்களுக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஈரானின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


 

Leave a comment

Comment