TamilsGuide

ஈரானை நோக்கி நகரும் அமெரிக்காவின் பெரும் படை - காத்திருக்கும் அழிவு

ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக வெளிநாட்டு  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment