ராஜ் எனக்கு தலையணை போன்றவர்- 2-வது கணவர் குறித்து சமந்தா
சினிமா
நாகசைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின் சமந்தா 2-வதாக பிரபல டைரக்டர் ராஜ்நிடி மோடுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் திருமணம் தோல்வி அடைந்ததால் உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல.
இரண்டாவது வாய்ப்பு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் வாழ்க்கை அமைகிறது. நான் இப்போது முழு திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அதற்கு காரணம் என் கணவர் ராஜ் நிடிமோடுதான்.
நாங்கள் மிகவும் பிரியமான தம்பதியினர். சினிமா, விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது என எல்லாவற்றையும் ரசித்து செய்கிறோம். ராஜ் எனக்கு தலையணை போன்றவர். அவர் இல்லாமல் என்னால் ஒருநாள் கூட வாழ முடியாது என்றார்.





















