ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி - டிரம்ப் - நெதன்யாகு இடையில் விரிசல்
ட்ரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தில், ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே பிரதான இலக்காக உள்ளது. ஆனால், நெதன்யாகுவோ ஈரானிய மக்கள் கிளர்ச்சி செய்து தற்போதைய அரசை வீழ்த்தும் வரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர வேண்டும் என விரும்புகிறார்.
இந்நிலையில் "இஸ்ரேலின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக அமெரிக்க வீரர்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது" என டிரம்ப் கறாராகத் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவலக்ள் தெரிவிக்கின்றன.
ஈரானில் போர் தொடங்கிய பிறகு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகாரப்பூர்வ விரிசலாக இது பார்க்கப்படுகிறது.
ஈரானில் 'ஆட்சி மாற்றம்' என்ற பெயரில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கினால், அது 'ஐஆர்ஜிசிஸ்தான்' (IRGCistan) போன்ற இன்னும் தீவிரமான ராணுவக் கட்டுப்பாட்டிற்கே வழிவகுக்கும் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனை மேற்கோள் காட்டியுள்ள ட்ரம்ப், ஈரானுடன் ஒரு "நியாயமான ஒப்பந்தத்தை" எட்டவே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஈரானிடம் இருந்து தங்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான "பெரிய பரிசு" (Oil and Gas Prize) காத்திருப்பதாக ட்ரம்ப் கூறியிருப்பது, அவர் பொருளாதார ரீதியான லாபத்திற்கே முன்னுரிமை அளிப்பதைக் காட்டுகிறது.
நெதன்யாகுவின் இந்த ரத்தவெறி பிடித்த திட்டத்தை முறியடிக்க, ட்ரம்ப் அடுத்த 5 நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இந்த இடைவெளியில் பாகிஸ்தான் அல்லது ஓமனில் வைத்து ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஒருவேளை இஸ்ரேல் தன்னிச்சையாகத் தாக்குதலைத் தொடர்ந்தால், அமெரிக்காவின் ராணுவ ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இடையிலான இந்த மோதல், மத்திய கிழக்கு போரின் போக்கை ஒரு புதிய திசைக்கு இட்டுச் சென்றுள்ளது























