TamilsGuide

கர படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் குறித்து வெளியான போஸ்டர்

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘கர’ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இன்று நடிகர் ஜெயராம் ‘முத்து செல்வன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

முன்னதாக, ‘செல்லி’ கதாபாத்திரத்தில் மமிதா பைஜுவும், ‘பரதன்’ கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment