TamilsGuide

என் ரசிகர்களுக்கு மனைவிகளால் ஆபத்து- ஷில்பா மஞ்சுநாத் 

'எமன்', 'காளி', 'இஸ்பேட் ராஜாவும், இதயராணியும்', 'வெப்', 'சிங்கப் பெண்ணே, 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்','வா வாத்தியார்' போன்ற படங்களில் நடித்தவர், ஷில்பா மஞ்சுநாத்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக படங்கள் நடித்து வரும் ஷில்பா மஞ்சுநாத் சமீபத்தில் பேசியுள்ள விஷயம் வைரலாகி இருக்கிறது.

அதில், எனது ஆண் ரசிகர்களுக்கு அவர்களின் காதலிகளால் பிரச்சனை வருவதாக கேள்விப்பட்டேன். படத்தில் திமிர் கலந்த என் அழகை பார்த்து, 'இவர் என் முன்னாள் காதலி போல இருக்கிறார்' என ரசிகர்கள் அவர்களின் மனைவிகளிடமும், காதலிகளிடமும், பெண் தோழிகளிடமும் சொல்லி புகழ்கிறார்கள்.

ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது. சமீபத்தில் கூட என்னை சந் தித்த ஒரு ரசிகர், அவரது மனைவி என்னை அதிகம் வெறுப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தார். ஒவ்வொரு முறையும் அவர் என்னை இன்ஸ்டாகிராமில் 'பாலோ' செய்ய, அடுத்த நிமிடமே அதை அவரது மனைவி அன்போலோ' செய்துவிடுகிறாராம். இதெல்லாம் ஆச்சரியம் தந்தாலும், ரசிகர்களின் மனங்களில் இப்படி தாக்கத்தை ஏற்படுத்தி யதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.
 

Leave a comment

Comment