TamilsGuide

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் பதவி ஏற்றார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக,  ஆராதனைகளைத் தொடர்ந்து,   துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment