ஈரான் போர் பாதிப்பை சுட்டிக்காட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் 98 சதவீதம் கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாங்குவதால் இந்த பிரச்சனையை அந்நாடு சந்தித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் பெட்ரோல் டீசல் விலை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. இந்நிலையில்தான், அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோச் அவசர நிலையை அறிவித்திருக்கிறார்.
அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேல் இந்த போர் நீடித்து வருகிறது.
ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு ராணுவ தளங்களை அமைத்துக்கொள்ள இடம் கொடுத்த வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி, லெபனான் போன்ற நாடுகளின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் அந்த வளைகுடா நாடுகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது குறிப்பாக பல எண்ணெய் கிணறுகள் பற்றி எரிகிறது. அதோடு அதோடு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல் தடமான ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது.
இதையடுத்து பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்லவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தது.


