TamilsGuide

தமிழ்ப்பணியில் திளைக்கும் பெருமைமிகு பெண்மணி திருமதி செல்லையா யோகரட்ணம் அவர்களுக்கு கௌரவம்

ஓய்வு பெற்ற  ஆங்கில ஆசிரியை  திருமதி செல்லயா யோகரட்ணம் அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி . சிறந்த சிந்தனையாளர் , சுயமரியாதையுடையவர் .  சொல்லாலும் செயலாலும்  வாழ்ந்து காட்டுபவர் .தென்மராட்சி  மீசாலையைச் சேர்ந்த " முத்தமிழ்  வித்தகர் " மறைந்த  திரு. அ .பொ. செல்லையா ஆசிரியரின் துணைவியார் என்பது இங்கே சிறப்பாக குறிப்பிட வேண்டியது .

ஈழத்தில்  பிறந்து காலத்தின் கட்டாயத்தினால்  கனடா  நாட்டில் குடியேறினாலும் தன் தமிழ்ப் பணியை ,சமுகப்பணியை தன் கணவரின்  பாதையில் நின்று தொய்வின்றி செய்து வருகிறார் . இவருடைய தமிழ்ப்பணி தமிழ்  இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும் .தள்ளாத வயதிலும் தமிழ்ப்பணியைத் தள்ளி வைக்காது தாய் மொழிக்காக உழைத்துவரும் அவரை வாழ்த்தி வணங்கி 21 மார்ச் 2026 சனிக்கிழமை நடைபெற்ற உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 33வது ஆண்டு விழா, சிறப்பும் செழிப்பும் சங்கமித்த ஓர் இனிய பொன் மாலைப் பொழுதில்  கெளரவம் வழங்கியது .
 

Leave a comment

Comment