வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோர்ஜியா நீதிமன்றக் கட்டடத்தில் பாரிய தீ விபத்து
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
1892-ல் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஃப்ளாய்ட் மாவட்ட மேலாளர் ஜேமி மெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து நடந்த நேரத்தில் நீதிமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாக ஃப்ளாய்ட் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நீதிமன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள ஆபத்துகளைக் கருத்திற்கொண்டும், எஞ்சியுள்ள பகுதிகளை ஆய்வு செய்யவும் ஏதுவாக, இன்று செவ்வாய்க்கிழமை (24) பிளாய்ட் கவுண்டி நீதிமன்றம் மூடப்படும். மீண்டும் நாளை (25) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





















