TamilsGuide

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.

இதன்படி, சந்தேகநபரை இந்த மாதம் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
 

Leave a comment

Comment