TamilsGuide

ஈரான் போர் - பாதுகாப்பு செயலர் மீது பழியை தூக்கி போட்ட டிரம்ப்

ஈரான் போர் தொடங்கி நான்கு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்து வருகிறார்.

டென்னசி மாகாணத்தில் நடைபெற்ற ஒரு வட்டமேஜை மாநாட்டில் பேசிய ட்ரம்ப், பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் தான் ஈரானை தாக்க முதலில் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை அனுமதிக்க முடியாது என்பதால் இந்த தாக்குதல் அவசியம் என்று ஹெக்செத் கூறியதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், போருக்கான காரணங்கள் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்ரேலின் பாதுகாப்பு முதல் ஈரானின் அணு ஆயுத மிரட்டல் வரை ஆளுக்கு ஒரு காரணத்தைக் கூறி வருகின்றனர்.

ஈரானின் பதிலடி தாக்குதல்கள் எதிர்பாராதவை என்று ட்ரம்ப் கூறினாலும், அது குறித்த முன்னெச்சரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமைதி பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் பேசினாலும், ஈரான் அதை முற்றிலுமாக மறுத்துள்ளது. மத்திய கிழக்கு போரினால் , உலக நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    
 

Leave a comment

Comment