பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து திறன்களையும் பயன்படுத்துவோம் என்று "ஈரானின் கத்தம் அல்-அன்பியா மத்திய படைத் தலைமையகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மிகவும் புத்திசாலித்தனமாகவும் வலிமையுடனும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே, இதில் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள நாடுகள் தலையிட எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார்.
ஈராக்கின் எர்பில் பகுதியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவற்படை விரிவான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அல்-தாஃப்ரா வான் தளம், சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் தளம் மற்றும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைஃபா, அஷ்கெலோன் மற்றும் குஷ் டான் ஆகிய பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ட்ரம்பின் "ஏமாற்று" நடத்தை ஈரானை போர் முன்னணியில் இருந்து திசைதிருப்பாது என்றும், எதிரியின் உளவியல் போர் நடவடிக்கைகள் வெளிப்பட்டுவிட்டதாகவும் "ஈரானின் கத்தம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபாகரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து பின்வாங்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


