TamilsGuide

விஜய் ஆண்டனியின் நூறுசாமி படத்தின் முதல் பாடல்.. மாய கனவோ ரிலீஸ் தேதி 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் ‘பிச்சைக்காரன்’.

இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தாலும், அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்.

அந்த வகையில், இருவரும் இணைந்துள்ள படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் வெளியிட்டார். இதில் விஜய் ஆண்டனியுடன் லம்பர் பந்து புகழ் ஸ்வாசிகா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. ‘நூறு சாமி’ படத்தின் 'மாய கனவோ' பாடல் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் அறிவித்துள்ளது.

இந்த படம் மே 1, உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment