TamilsGuide

ஒன்டாரியோ நபருக்கு வாழ்நாள் தடை மற்றும் அபராதம்

வடகிழக்கு ஒன்டாரியோவின் லார்டர் லேக் (Larder Lake) பகுதியில் இரண்டு வேட்டை விதிமீறல்களில் ஈடுபட்ட நபருக்கு, வாழ்நாள் முழுவதும் வேட்டையாடத் தடையும், 730 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

லார்டர் லேக்கைச் சேர்ந்த டொனால்ட் கோஸலின் (Donald Gosselin) என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியிடம் உரிமத்தைக் காட்டத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை குறித்த நபர் ஒப்புக்கொண்டதாக இயற்கை வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை 2024, நவம்பர் 11 அன்று லார்டர் ஸ்டேஷன் சாலையில் அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையின் போது தொடங்கியது:

கோஸலின் தனது வேட்டை முகாமில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரது துப்பாக்கி முன் இருக்கையில் இருந்தது. அதிகாரிகள் விசாரித்தபோது, தான் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாடவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

ஆனால், தொடர் விசாரணையில் அவர் ஒரு மானை வேட்டையாடி அருகில் உள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்டாரியோ வேட்டை விதிமுறைகளின்படி, அந்த விலங்கின் மீது உரிய குறிச்சொல் (Tag) இணைக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

ஹெய்லிபரியில் (Haileybury) உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பின்வரும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன:

ஒன்டாரியோவில் வேட்டை உரிமம் பெறுவதற்கும், வேட்டை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டதுடன் 730 டொலர் அபராதத் தொகை விதிக்கப்பட்டது. 
 

Leave a comment

Comment