TamilsGuide

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

கண்டி தமிழ் சிங்க பெண்கள் தலைமையில் மகளிர் தின நிகழ்வுகள் டெவோன் மண்டபத்தில் நடைப்பெற்றது.

கண்டி இந்து மகளிர் சங்க தலைவி செல்வி. கலையரசி,  கண்டி இந்து மகளிர் சங்க உப தலைவி ப்ரியதர்ஷினி , கண்டி இந்து மகளிர் சங்க செயலாளர் ஷர்மிளா பரமேஸ்வரன், கண்டி இந்து மகளிர் சங்க பொருளாளர்  எஸ். சுமதி ஆகியோரின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது

மேலும் சமூக சேவைகள் , ஆன்மீக சேவைகள் , கல்வி துறை போன்ற பல்வேறு துறைகளில் சேவையாற்றிய மாத்தளை சாம சிறி யோகராணி பாலசுப்பிரமணிய சர்மா அம்மையார் அவர்களுக்கு,  கண்டி இந்து மகளிர் சங்கத்தினால் ஞாபக சின்னம் வழங்கி கெளரவமளிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து இந்து மகளிர் சங்க தலைவி,  உப தலைவர்,  பொருளாளர் அவர்களை அந்த சங்கத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் பொன்னாடை போற்றி கெளரவப்படுத்தியதுடன்,  கலை நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment