TamilsGuide

மம்மூட்டியின் அடுத்த சம்பவம்.. மட்டஞ்சேரி மாபியா - பெயருக்கு பின்னால் சர்ச்சை

‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரஹ்மான்.

2019 இல் இவரது இயக்கத்தில் மம்மூட்டி ‘உண்டா’ என்ற திரைபடத்தில் நடத்தியிருந்தார். தொடர்ந்து 'லவ்', 'தள்ளுமலா' என அடுத்தடுத்த கலித் இயக்கிய படங்கள் கவனம் பெற்றன.

இறுதியாக ‘ஆழப்புழா ஜிம்கானா’ படத்தை கலித் தயாரித்து இயக்கினார். இந்த சூழலில் கலித் ரஹ்மான் மீண்டும் மம்மூட்டியை வைத்து படம் இயக்குகிறார்.

இதில் ஆசிப் அலி, நஸ்லேன் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு, ‘மட்டஞ்சேரி மாபியா’ எனப் பெயரிட்டுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

நியோக் கிருஷ்ணா, ஷராபு-சுஹாஸ் மற்றும் தஸ்ரீக் அப்துல் சலாம் கதை எழுத சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மட்டஞ்சேரி மாபியா என படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல விவாதங்கள் மலையாள வட்டாரங்களில் உருவாகி உள்ளன.

காரணம் மட்டஞ்சேரி மாபியா என்று அறியப்படும் எர்ணாகுள மாபியா மலையாள சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு கும்பலாக அறியப்படுகிறது. மட்டன்சேரி என்பது எர்ணாகுளத்தின் துறைமுக பகுதியாகும்.

தலைமுறையாக சினிமாவில் இருக்கும் சிலர் மலையாள திரையுலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்ற பேச்சு நீண்ட காலமாக உலா வருகிறது.

அதேபோல் மட்டஞ்சேரி மாபியாவில் உள்ள பலரே திரைப்படங்களில் போதைப்பொருளை ஊக்குவித்து அதை கலாச்சாரமாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழலில் மூத்த நடிகர் மம்மூட்டி, ஜென் இசட் நடிகர் ஆசிப் அலி, ஜென் ஆல்பா தலைமுறை நடிகர் நஸ்லேன் என மூன்று தலைமுறையினரை கொண்டு இந்த மாபியா படத்தை கலித் ரஹ்மான் இயக்க உள்ளார்.

இதனால் இப்படத்திற்கு நிறைய பிரச்சனைகள் வரும் என்று கேரள வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a comment

Comment