TamilsGuide

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்துகொள்ளுதல் போன்ற உன்னத மனிதாபிமானப் பண்புகளை வாழ்வோடு இணைத்து உயரிய விழுமியங்களைத் தனிப்பட்ட வாழ்வோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாது, நாட்டின் பொதுநலனைக் கருதிப் பயன்படுத்துவதே முக்கிய தேவையாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு இலங்கையர் என்ற வகையில் ஒரே கொடியின் கீழ் அணிதிரள எம்மை ஊக்குவிப்பதாகவும் சமய மற்றும் கலாசாரப் பிணைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம், இனங்களுக்கிடையே கட்டியெழுப்பப்படும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தை அடித்தளமாகக் கொண்ட அஸ்திவாரத்தின் மீதே நாட்டின் நிலையான சமாதானமும் சுபீட்சமும் தங்கியுள்ளதாக ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

சகோதரத்துவத்துடன் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகம் முழுவதும் நிலவும் யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் எதிர்நோக்கியுள்ள மிகக் கடினமான மற்றும் வேதனையான நிலை குறித்து கவலை கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்
 

Leave a comment

Comment