TamilsGuide

எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமரா கூறியுள்ளார்.

மேலும், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே இன்று (20) எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

QR குறியீடு மற்றும் ஒற்றை/இரட்டை முறைப்படி எரிபொருள் வழங்குவதன் மூலம், நெரிசல் குறைக்கப்பட்டு, அனைவரும் மிகவும் வசதியாக எரிபொருளைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 

Leave a comment

Comment