TamilsGuide

ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் - அடுத்து நடக்கபோவது என்ன? அச்சத்தில் உலக நாடுகள்

ஈரானுக்கு எதிராகப் போரிடும் தனது படைகளைப் பலப்படுத்துவதற்காக, அமெரிக்க இராணுவம் பல போர்க்கப்பல்களுடன் 4,000 கடற்படை வீரர்களை அனுப்பத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உலக் நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

'நியூஸ்மேக்ஸ்' (Newsmax) செய்தியை மேற்கோள் காட்டி இந்த தகவலை அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத நான்கு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா மேற்கொண்ட தாக்க்தலில் ஈரானில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment