TamilsGuide

வயதை குறிப்பிட்டு விமர்சனம் - கோபமான நடிகை அனுஷ்கா 

நடிகை அனுஷ்கா திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் 44 வயதான அனுஷ்கா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் என்று தகவல் வெளியானது. இதுவரை வெளியான திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா பெரிதாக செவி சாய்க்கவில்லை. ஆனால் இப்போது கோபம் அடைந்து விட்டார். அவரது கோபம் திருமண செய்தியால் அல்ல. வயதை குறிப்பிட்டு விமர்சனம் எழுந்தது தான் அவரை கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து அனுஷ்கா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வயதுக்கு கொடுக்கப்படும் தேவையற்ற கவனமும் ஒவ்வொரு பதிவிலும் ‘44’ என்ற எண்ணை ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் போல முன்னிலைப்படுத்துவதும் வருத்தமளிக்கிறது. வயது இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தால் ஹீரோக்கள் மீது மட்டும் வயது விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்களுக்கு மட்டும் வயது விஷயத்தை பெரிதாக்குகிறீர்கள்? கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளையும் மதியுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 

Leave a comment

Comment