TamilsGuide

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விட்டுருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கில் சுண்டிகுளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வன ஜீவ ராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் அப் பிரதேசங்களில் இதுவரை யானைகள் காணப்பட்டிருக்கப்படவில்லை .

இந் நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.

இதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு யானை தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட யானை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணமடைந்தமை குறிப்பிடதக்கது
 

Leave a comment

Comment