ஹம்பாந்தோட்டை, கட்டுவாவ சல்மாலியாயா பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட சோதனையின் போது சுமார் 500 லீட்டர் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீட்டருக்கும் அதிகமான டீசலும், சுமார் 20 லீட்டர் பெற்றோலும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட எரிபொருளுடன் ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


