TamilsGuide

தாய்க்கிழவி OTT ரிலீஸ் தேதி.. 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடித்த திரைப்படம் 'தாய்க்கிழவி'. இப்படம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பெரிய லாபத்தை பெற்று கொடுத்த நிலையில் சிவகார்த்திகேயன் பெரிய வெற்றி விழாவை சமீபத்தில் நடத்தி இருந்தார்.

தாய்க்கிழவி படம் ரிலீசாகி 20 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் 75 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

வரும் மார்ச் 26-ஆம் தேதி ஹாட்ஸ்டார் (Hotstar) தளத்தில் இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் இது உறுதியாகும்.

ஹாட்ஸ்டாரில் மார்ச் 27ம் தேதி விஜய் சேதுபதியின் காட்டன் படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

Leave a comment

Comment