TamilsGuide

100 ஆண்டு கால ஜோன்ஸ் சட்டத்தை நீக்கிய அமெரிக்கா

அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, அமெரிக்கக் கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட "ஜோன்ஸ் சட்டம்" (Jones Act) தற்காலிகமாகத் தளர்த்தப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

1920ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையே பொருட்களை ஏற்றிச் செல்ல அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அமெரிக்கக் கொடியுடன் கூடிய மற்றும் அமெரிக்கர்களால் இயக்கப்படும் கப்பல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

இது உள்நாட்டுக் கப்பல் தொழிலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சடமாகும். இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவிக்கையில், இந்தச் சட்டம் அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் மற்றும் நிலக்கரி போன்ற அத்தியாவசிய வளங்கள் தடையின்றி விநியோகிக்கப்படும். வெளிநாட்டுக் கப்பல்களையும் உள்நாட்டு விநியோகத்திற்குப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்துச் செலவைக் குறைத்து, எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிப்பதிலும், வெளிநாட்டுக் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டணம் விதிப்பதிலும் தீவிரம் காட்டி வந்த ட்ரம்ப் நிர்வாகம், தற்போது இந்தச் சட்டத்தைத் தளர்த்தியிருப்பது ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

எரிபொருள நிலையங்களில் அதிகரித்து வரும் விலையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைச் சமாளிக்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் , இந்த முடிவினால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படாது என கடல்சார் அமைப்புகள் (Maritime groups) அதிருப்தி வெளியிட்டுள்ளன.

கப்பல் போக்குவரத்துச் செலவை விட, மசகு எண்ணெய்யின் உலகளாவிய விலை உயர்வே தற்போதைய விலை அதிகரிப்பிற்குக் காரணம் என்றும், இந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

Leave a comment

Comment