TamilsGuide

முதல் நாளிலேயே... கோடிகளை கடந்த துரந்தர் 2 வசூல்!

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. ஆனால் இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் இன்று (மார்ச் 19) வெளியானது. இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவிலேயே பல கோடிகளை ஈட்டியிருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் பிரீமியர் ஷோவில் மட்டும் உலகளவில் 52.71 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று வெளியான முதல் காட்சியில் மட்டும் 17.07 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிச்சயம் 100 கோடி ரூபாயை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தென்னிந்தியாவில் இந்தப் படம் தமிழ் மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
 

Leave a comment

Comment