மட்டக்களப்பு மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கடந்த காலத்தில் மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட மண்ணெண்னை நிரப்பு நிலையங்களில் மீனவர்களுக்கு வழங்கிய முறையின்படி இலகுவாக பெற்றோலை பெறுவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஆவணை செய்யுமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீனவர்களுக்கான பெற்றோல் இன்மை காரணமாக மீனவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்போது இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக QR திட்டம் வந்துள்ளது இதன் காரணமாக மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பெற்றோலை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது
40 குதிரை வலு கொண்ட படகு இயந்திரம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 2 லீற்றர் பெட்ரோல் தேவைப்படுகிறது .
இந்த படகு இயந்திரம் ஸ்ராட்டிங் செய்வது பெற்றோலில் அதன் பின்னர் மண்ணெண்ணையில் இயங்குகின்றது அதற்கான மண்ணெண்ணையை எங்களிடத்தில் இருந்து பெற்று வருகின்றனர்.
கடந்த காலத்தில் மண்ணெண்னை நிரப்பு நிலையங்களில் 500 லீற்றர் பெற்றோலை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்றோலை பெற்று வழங்கி வந்தோம்.
தற்போது ஞசு திட்டம் அறிமுகப்படுத்தியதையடுத்து பெற்றோலை பெற்று மீனவர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் இருக்கின்றது.
மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்காக சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து மோட்டார் சைக்கிளில் சென்று பெற வேண்டியுள்ளது இதனால் மீனவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவே கடந்த காலத்தில் மீனவர்களுக்கு வழங்கிய முறையின்படி வழங்க அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு இலகுவாக மீனவர்கள் பெற்றோலை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களையும் செய்து தரும்படி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவி பணிப்பாளர், மட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்
அதேவேளை கடந்த ஊடக சந்திப்பில் மண்ணெண்ணையில் ஓடுகின்ற டீசல் வாகனங்கள் சம்மந்தமாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன் ஆனால் இன்று வரை அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை இன்றும் பல டீசல் வாகனங்கள், பாரஊர்திகள், பஸ் வண்டிகள், மண்ணெண்ணையில் ஓடுகின்றன இதனால் எதிர் காலத்தில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது
எனவே உடனடியாக பொலிசாருடன் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு குழுவாக விசாரணை செய்து டீசல் வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடுவதை முற்று முழுதாக நிறுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


