TamilsGuide

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 105.22 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களைக் கடத்த முற்பட்ட இருவர் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஹக்மனாவைச் சேர்ந்த 20 வயது தொழிலதிபரும், அகுனகொலபெலஸ்ஸவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயது பெண் தாதியர் மாணவி ஆகியோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இன்று அதிகாலை 1.00 மணிக்கு இருவரும் கட்டுநாயக்க வந்தடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 10 கிலோ 552 கிராம் எடை கொண்ட குஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு அவர்களைக் காவலில் வைப்பதற்கான உத்தரவுகள் பெறப்பட்டன. 

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன
 

Leave a comment

Comment