TamilsGuide

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க கொழும்பு மாநகர சபை (CMC) முடிவு செய்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவு உடனடியாக அமுல்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதலின் விளைவாக நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த முடிவுக்கு கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
 

Leave a comment

Comment